மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நடிகை அமலா பால் ஒரு கோடிக்கும் கூடுதலான மதிப்புள்ள சொகுசு கார் வாங்கி, அதனை போலி முகவரி கொடுத்து புதுச்சேரியல் பதிவு செய்து 20 லட்சம் ரூபாய் அளவில் வரி ஏய்ப்புச் செய்துள்ளதாக, அவர் மீது கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் கைதாவதை தடுக்க முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் அமலாபால். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம். முதலில் அமலாபால் இந்த வழக்கை விசாரிக்கும் மாநில குற்றப்பிரிவு போலீஸ் முன்பு வருகிற 15ந் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, மனு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. இதனால் அமலாபால் 15ந் தேதி போலீஸ் முன் ஆஜராவது உறுதியாகி இருக்கிறது.