ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நிவின்பாலி தற்போது மலையாளத்தில் 'காயங்குளம் கொச்சுன்னி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கும் இந்தப்படத்தை தமிழில் '36 வயதினிலே' புகழ் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். கேரளாவில் எண்பதுகளில் ராபின் ஹூட் போல வாழ்ந்த 'காயங்குளம் கொச்சுன்னி' என்கிற பயங்கர கொள்ளையனின் வாழ்க்கை வரலாற்றைத்தான் படமாக்கி வருகிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
தற்போது இந்தப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் மோகன்லால். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நேற்று வெளியாகியுள்ளது. அந்த முக்கியமான கேரக்டரில் மோகன்லாலைத் தவிர வேறு யார் நடித்தாலும் சிறப்பாக இருக்காது என இயக்குனர் கூறியதை ஏற்றுக்கொண்டு இதில் நடிக்க சம்மதித்துள்ளாராம் மோகன்லால்.
இதற்கு முன் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உதயநானுதாரம், இவிடம் சொர்க்கமானு, காசனோவா ஆகிய படங்களில் மோகன்லால் நடித்துள்ளார் என்பதும் அந்த நட்பின் அடிப்படையில் மோகன்லால் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.