ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளவர் அனிருத். தெலுங்கில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் மற்றும் பலர் நடிக்கும் 'அஞ்ஞாதவாசி' படம் மூலம் தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அனிருத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
நாளை மறுநாள் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக முதல் முறையாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏற்கெனவே தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், மிகப் பெரும் ஸ்டார் ஆக இருக்கும் பவனுடன் ஜோடி சேர்ந்துள்ளதால் அங்கு அவருடைய மார்க்கெட் இன்னும் உயரும்.
பொங்கலை முன்னிட்டு வெளியாகும் 'அஞ்ஞாதவாசி' படத்தில் இசையமைப்பாளர் ஆக உள்ள அனிருத்தும், நாயகியாக உள்ள, கீர்த்தி சுரேஷ் இருவரும், தமிழிலும் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திலும் அது போலவே இடம் பெற்றுள்ளனர். சூர்யா ஜோடியாக முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படத்திற்கு பொங்கல் வெளியீட்டில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல்களும் ஏற்கெனவே சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
தமிழிலும், தெலுங்கிலும் இரண்டு முக்கிய படங்களில் இடம் பெற்றுள்ள அனிருத், கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் இந்த பொங்கல் 'இரட்டைப் பொங்கல்'. இரண்டு படமும் வெற்றி பெற்றால் இருவருமே டாப் லிஸ்ட்டில் இன்னும் மேலே போவார்கள்.