மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் அருன் பிரபு புருஷோத்தமன் என்ற அறிமுக இயக்குநறர் இயக்கத்தில் சென்ற மாதம் 15-ஆம் தேதி வெளியான படம் அருவி. அதிதி பாலன் என்ற புதுமுக நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'அருவி படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்த படம் வெளியாகி மூன்றாவது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை 98 ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டு வந்த 'அருவி'படத்துக்காக மேலும் ஸ்கீரின்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது 'அருவி' படம் 110 ஸ்கீரின்களில் திரையிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெளியான வேலைக்காரன், சக்கப்போடுபோடுராஜா, பலூன் போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வருவதால் 'அருவியின் வெற்றி பயணம் சத்தமில்லாமல் தொடர்கிறது.
இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு அருவி படக்குழுவினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அருவி படத்தை தயாரித்த 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மற்றொரு படம் 'தீரன் அதிகாரம்.
எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடித்து கடந்த நவம்பர் மாதம் 17-ஆம் தேதி வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 'தீரன் அதிகாரம் ஒன்று' 50-வது நாளை எட்டி இன்னும் சில தியேட்டர்களில் வெற்றி நடை போட்டு வருகிறது.
இன்றைய சூழ்நிலையில் ஒரு வாரம் ஓடினாலே அது வெற்றிப் படமாக கருதப்படும் நிலையில் 'தீரன் அதிகாரம் ஒன்று' 50-வது நாளை எட்டியிருப்பது சாதனை தான்.