ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் கமல், தற்போது அமெரிக்காவில் இருந்து வருகிறார். இதனால் சமீப காலமாக டுவிட்டரில் கருத்து பதிவிடுவதை குறைத்துக் கொண்டுள்ளார். ரஜினி பிறந்தநாள், காங்., தலைவர் ராகுலுக்கு வாழ்த்து என்பது போன்ற சில முக்கிய விஷயங்களுக்கு மட்டுமே அவர் கருத்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அதிகாலை (இந்திய நேரப்படி டிச.,31 அதிகாலை 3.30 மணி) புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். பொது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம் பொங்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு காலை 10.25 மணியளவில், ரஜினிக்கு வாழ்த்து சொல்லி மற்றொரு டுவீட் போட்டுள்ளார் கமல். அதில், சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக என குறிப்பிட்டுள்ளார்.