சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை படங்களை தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ்க்கு படம் இயக்குகிறார் தனுஷ். இதற்கு இடையில் மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக பேசப்பட்டார். ஆனால் அவர் முதல் பாகத்தை விட அதிக சம்பளம் கேட்டதால் தவிர்க்கப்பட்டார். அவருக்கு பதிலாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
மாரி 2ம் பாகத்தில் தனுசுக்கு எதிராக களத்தில் நிற்கும் வில்லியாக நடிக்க வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தனுசுடன் அவர் நடிக்கும் முதல் படம் இது. இதில் வில்லனாக நடிக்கும் மலையாள நடிகர் டொவினோ தாமசுக்கு வரலட்சுமி ஜோடி என்றும் கூறப்படுகிறது. கிருஷ்ணா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
மாரி படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துள்ள இயக்குனர் பாலாஜி மோகன். தற்போது படத்திற்கான லொக்கேஷன்களை பார்த்து வருகிறார். என்னை நோக்கி பாயும் தோட்டாவை முடித்து விட்ட தனுஷ், வட சென்னையின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். தனுஷ் தயாரிக்கும் மாரி இரண்டாம் பாகத்திற்கு யுவன் இசை அமைக்கிறார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகிறது.