சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண், நடிகை சன்னி லியோன். நீலப்படங்களில் நடித்து வந்தவர், ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்கு வந்து அதன் பிறகு இந்திப் படங்களில் நடித்து, தென்னிந்திய மொழி படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடி தன்னை முன்னணி நடிகையாக முன்நிறுத்திக் கொண்டிருக்கிறார்.
சன்னி லியோன் தற்போது நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்காக அவருக்கு 3 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு வீரமாதேவி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வரலாற்றுக் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு வீர பெண்ணின் கதை என்கிறார்.
அது கற்பனையா? நிஜமான வரலாறா என்று தெரியவில்லை. ராஜேந்திர சோழனின் மூன்று மனைவிகளில் ஒருவர் வீரமாதேவி. கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏறியவர் அவருடைய கதையா என்றும் தெரியவில்லை. இந்தப் படத்தை சவுகார்பேட்டை, பொட்டு படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். அம்ரீஷ் இசை அமைக்கிறார்.