ப்ரியா வாரியருக்கு இது நல்ல நேரம்! : மஞ்சிமா மோகன் | எங்களுக்கும் பொறுப்பு இருக்கு! | கிராமத்திலும் சுற்றுலா கொண்டாடலாம்! | தீபிகா காதில் ரன்பீர் ரகசியம்? | திரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் சந்திப்பு | சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் |
தனியார் தொலைக்காட்சிகள் வளர்ந்த பிறகு அவற்றில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன திரைப்படங்களை உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். அந்த சில மாதங்கள் அதன் பின் சில வாரங்களாகவும் மாறியது.
இணையவசதி தற்போது அதிகமானதைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாகவே பைரசி இணையதங்கள் மூலம் திரைப்படம் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே திருட்டுத்தனமாக பல இணையதளங்கள் அந்தப் படங்களை பதிவேற்ற ஆரம்பித்தன. அவற்றைத் தடுக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பல முயற்சிகளை எடுத்து வருவதாகச் சொன்னாலும் இன்னமும் அந்த பைரசி இணையதளங்கள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இப்போது அந்த இணையதங்களிடமும் கெஞ்சும் அளவிற்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இறங்கிப் போய்விட்டார்கள்.
'சென்னை 2 சிங்கப்பூர்' இயக்குனர் அப்பாஸ் அக்பர், 'வேலைக்காரன்' பட இயக்குனர் மோகன்ராஜா பைரசி இணையதளங்கள் புதிய படங்களை வெளியிடுவதைத் தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் அளவிற்கு ஆகிவிட்டது. அதனால், பல தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாகவே இணையதளங்களில் படங்களை விரைவாக வெளியிடுவதை ஆரம்பித்துள்ளார்கள்.
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை வெளியான 28 நாட்களில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டார்கள். அந்தப் படத்தைத் தயாரித்த நிறுவனம்தான் கடந்த வாரம் வெளியான 'அருவி' படத்தையும் தயாரித்தது. இப்போது 'அருவி' படம் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக பொங்கல் முதல் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
இந்த வழியில் இன்னும் பல தயாரிப்பாளர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.