முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
சிவாஜி நடித்த கர்ணன், உத்தமபுத்திரன், தில்லான மோகனம்பாள் போன்ற படங்களை பார்த்து விட்டு, இப்ப வரும் படங்களை பார்க்கும் போது ரொம்ப வேதனையாக இருக்கிறது. காசுக்காக மாரடிக்கும் கூட்டமாக சினிமா மாறிவிட்டது என்று காட்டமாக பேசி இருக்கிறார் டைரக்டர் சேரன்.
1964-ல் ஆர்.பி.பந்தலு இயக்கி, தயாரித்த மாபெரும் வெற்றி பெற்ற சரித்திர படம் கர்ணன். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், அசோகன், என்.டி.ராமாராவ், நம்பியார், சாவித்திரி, தேவிகா உள்ளிட்ட ஏகப்பட்ட திரை ஜாம்பவான்கள் நடிப்பில் வெளியான இப்படம், பாரத பொக்கிஷமாக கருதப்படும் சிவாஜியின் பல படங்களுள் மகாபாரத கம்பீரத்தை, சிவாஜியின் சிம்ம குரலோடு ஒலித்த கர்ணன் படமும் ஒன்று. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், கண்ணதாசன் வரிகளில் பாடல்கள் அனைத்தும் பெரிதும் பேசப்பட்டது. இப்போது இந்தபடம் மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாகி, விரைவில் வெளிவர இருக்கிறது.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் சேரன், விழாவில் ரொம்பவே உணர்ச்சி பொங்க பேசினார். அவர் பேசியதாவது, சிவாஜியை பார்த்து சினிமாவுக்கு வந்தவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன். சிறு வயதில் மதுரையில், தியேட்டர்களில் படம் பார்க்க பலமுறை அம்மாவிடம் அனுமதி வாங்கி அவர் நடித்த படங்களை கையில் சூடம் ஏற்றி பார்த்திருக்கிறேன். அவர் வீட்டில் ஒரு வேலைக்காரனாக, அவர் கை, கால்களை அமுக்கிவிடும் ஒரு சேவகனாக போக ஆசைப்பட்டவன் நான். அவ்வளவு வெறி பிடித்த ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் படங்களை பார்த்துவிட்டு, இப்ப வரும் படங்களை பார்க்கும் போது ரொம்ப வேதனையாக இருக்கிறது. காசுக்காக மாரடிக்கும் கூட்டமாக சினிமா மாறிவிட்டது. பில்லா, மாப்பிள்ளை, கழுதை குதிரைன்னு எல்லாம் படம் எடுக்கிறாங்க. யாருக்காச்சும் சிவாஜி நடித்த கர்ணன், உத்தமப்புத்திரன், தில்லான மோகனம்பாள் போன்ற படங்களை எடுக்க தைரியம் இருக்கா...?
பிழைப்பு நடத்த சினமாவுல இருந்தாலும், சினிமாவுக்காக வாழ்ந்தவர் நடிகர் சிவாஜி. நீங்க ஏன் அரசியலில் அவரை கொண்டு வரலன்னு எனக்கு கவலையா இருக்கு. அவரை தோற்கடிக்க தஞ்சாவூரில் என்னென்னமோ செய்தார்கள். உண்மை உங்களுக்கு பிடிக்காது, பொய் பித்தலாட்டம், நேர்மை இல்லாமை இதெல்லாம் தான் உங்களை நம்ப வச்சது, அவரை தோற்கடிச்சிட்டீங்க. ஏன்...? நாம சிவாஜியை ஆட்சி பண்ண சொல்லலியேன்னு ஒரு நாள் வருத்தப்படுவீங்க. சிவாஜி சார் வீட்டுல இருக்கிற ஒவ்வொரு பொருளும் ஒரு பொக்கிஷம். அவருடைய கை கரைபடியாத சுத்தமான கை. கைநீட்டி யார்கிட்டேயும் காசு வாங்கல, யாருக்கும் சிபாரிசு பண்ணல, ஆனால் அவரை நம்ம சரியாக பயன்படுத்தல. இங்க இருக்கும் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து இனி சிவாஜி நடித்த படங்களின் தலைப்பை யார்க்கும் கொடுக்காதீங்க, அப்படி வர படங்களை பார்க்கும் போது ரொம்ப அசிங்கமா இருக்கு. அவர் நடித்த படங்களின் தலைப்பை பயன்படுத்த யாருக்கும் தகுதியில்லை என்று நினைக்கிறேன்.
எவ்வளவு பெரிய கலைஞன் அவர். அவரை இன்னும் ஒருபடி மேல போய் சிந்தித்தால், அவருக்குன்னு ஒரு பல்கலைக்கழகம் தொடங்கி அவரது படங்களை பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கும், புதிதாக நடிக்க வருபவர்களுக்கும் போட்டு காண்பிக்க வேண்டும் என்று உணர்ச்சியோடு பேசிய சேரன், தன்னுடைய ஆசையையும் மேடையில் வெளிப்படுத்தினார். அதாவது, எனக்கு புதியபறவை படத்தை திரும்ப எடுக்கும் வாய்ப்பு கொடுத்தால், நானும் சிவாஜி சார் படத்தில் வேலை பார்த்தேன் என்ற பெருமை அவரது ரசிகனான எனக்கு கிடைக்கும் என்று கூறினார்.