பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படம் எனது என்று கேட்டால் எல்லோரும் சொல்வது அலிபாபாவும் 40 திருடர்களும் என்பர்கள். ஆனால் உண்மை அதுவல்ல. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படம் தர்மபுரி ரகசியம். இதற்கு ராஜதுரோகி என்று இன்னொரு பெயரும் உண்டு. அலிபாபாவும் 40 திருடர்களும் படம் வெளிவந்தது 1956. தர்மபுரி ரகசியம் வெளிவந்தது 1938. அதாவது அலிபாபாவுக்கு 18 வருடங்களுக்கு முன்பே தர்மபுரி ரகசியம் வெளிவந்து விட்டது.
அலிபாபாவுக்கும், தர்மபுரி ரசிசியத்துக்கு வித்தியாசம் என்ற வென்றால். தர்மபுரி ரகசியம் சிபியா வண்ணத்தில் வெளிவந்தது. அலிபாபா அதற்கு அடுத்த கட்டமான கேவா கலரில் வெளிவந்தது. இயற்கை வண்ண காட்சிகள் அடங்கிய முதல் தமிழ் படம் என்று தர்மபுரி ரகசியம் படத்துக்கு விளம்பரம் செய்திருந்தார்கள்.
தமிழ்நாடு டாக்கீஸ் சார்பாக எஸ்.சவுந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கி இருந்தார், அண்ணாஜிராவ் கதாநாயகனாக நடித்திருந்தார். திருவாங்கூர் சமஸ்தானத்தை விமர்சித்து எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு திருவாங்கூர் சமஸ்தானம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.