Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட் அனுமதி

16 டிச, 2017 - 16:15 IST
எழுத்தின் அளவு:
Chennai-HC-give-permission-to-file-case-against-S.A.Chandrasekar

முகாந்திரம் இருந்தால் நடிகர் விஜயின் அப்பாவும் டைரக்டரருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என விமர்சித்தார். கோவில் உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்றால் யாருமே தேர்வு எழுத போகத் தேவையில்லை என்றும் எஸ்ஏ சந்திரசேகர் கூறி இருந்தார்.


இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நவம்பர் 25 ம் தேதி புகார் அளித்தார். தொடர்ந்து, தனது புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிடக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


Advertisement
'களவாடிய பொழுதுகள்', தாமத வெளியீடு, தாக்கத்தை ஏற்படுத்துமா ?'களவாடிய பொழுதுகள்', தாமத வெளியீடு, ... பிரமாண்ட நாயகன் படத்தை தமிழில் வெளியிடும் நாகார்ஜூனா பிரமாண்ட நாயகன் படத்தை தமிழில் ...


வாசகர் கருத்து (5)

Shanu - Mumbai,இந்தியா
19 டிச, 2017 - 14:40 Report Abuse
Shanu மத வெறி வந்து விட்டது. மோடி நினைத்ததை சாதித்து விட்டார். நீங்களே உங்களை அழித்து கொள்ளுங்கள். டிரம்ப் செய்த வேலையும் மோடியால் நிறைவேறுகிறது. இந்தியாவில் உள்ள இளைஞர்களை அளித்தால் நல்லது என்று தோன்ற, மோடியை பயன்படுத்தி, மத தீவிரவாதத்தை கையில் எடுத்து அழிகிறது இந்தியா. அடுத்த உ பி தமிழகம் தான். மத சண்டைக்கு நாங்கள் போக மாட்டோம். உங்களை நீங்களே அழித்து கொள்ளுங்கள்.
Rate this:
kuruvi - chennai  ( Posted via: Dinamalar Windows App )
17 டிச, 2017 - 01:29 Report Abuse
kuruvi Christians are supposed to give 10% of theit earnings to Vaticsn to get into heaven. Is it not bribing?
Rate this:
Arivu Nambi - madurai,இந்தியா
16 டிச, 2017 - 20:18 Report Abuse
Arivu Nambi திருப்பதியில் இந்த காணிக்கை பொதுமக்களுக்குத்தானே செலவு செய்யப்படுகிறது . அதீத உரிமை ஆபத்து என்று தோன்றுகிறது எனவே இவர்களுக்கு குறைத்தால்தான் நல்லது என்றால் குறைப்பதில் தப்பில்லை ..
Rate this:
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
16 டிச, 2017 - 18:54 Report Abuse
சூரிய புத்திரன் இந்துக்களை இப்படி பேச யாா் உாிமை கொடுத்தது. இவனையும் இவன் மகன் ஜோசப்பையும் இந்துக்கள் நிராகாிக்க வேண்டும். இவன் மகன் நடிக்கும் படங்களை இந்துக்கள் பாா்க்காமல் தோல்வியடைய செய்ய வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in