ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சூசந்த் சிங் ராஜ்புட் மற்றும் சாரா அலி கான் நடித்துள்ள கேதார்நாத் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக கடந்த சில நாட்களுக்கு தகவல் வெளியானது. ஷாருக்கான் நடித்துள்ள படமும் அதே தேதியில் ரிலீசாக உள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
ஷாருக்கான் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதால், அவரது படத்துடன் கேதார்நாத் படம் மோதுவதை தான் விரும்பவில்லை என கேதார்நாத் படத்தின் தயாரிப்பாளர் பிரிர்னா அரோரா கூறியிருந்தார். தற்போது இப்படத்தின் டைரக்டரான அபிஷேக் கபூர் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகவில்லை எனவும், முன்ப அறிவித்தபடி 2018 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.
இது பற்றிய தனது டுவிட்டர் பக்கத்தில், கேதார்நாத் படம் 2018 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்பதை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.