ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தேவி படத்தை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் கரு. தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இந்த படத்தில் சாய் பல்லவி நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்துள்ளார். கதாநாயகியை மையப்படுத்தும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாக ஷாரியா நாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு 2.ஓ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
முக்கியமாக அம்மா- மகளுக்கிடையே நடக்கும் பாசப் போராட்ட கதையில் தயாராகியுள்ள இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சாய் பல்லவி. மேலும், இந்த படத்தை தமிழைப் போலவே தெலுங்கிலும் பெரிய அளவில் வெளியிட இருப்பதால், சில முன்னணி தெலுங்கு நடிகர் நடிகைகளையும் முக்கிய கேரக்டர்களில் நடிக்க வைத்துள்ள ஏ.எல்.விஜய், கரு படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு கனம் என்று பெயர் வைத்துள்ளார். இந்த படத்தை பிப்ரவரி 9-ந்தேதி வெளியிடுகிறார்கள்.