ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சரத்குமாரின் வாரிசு, நடிகை வரலட்சுமி. போடா போடி, தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர், சமீபத்தில் வெளியான சத்யா படத்திலும் நடித்திருந்தார். நடிகையாக மட்டுமல்லாது சேவ் சக்தி என்ற பெண்கள் தொடர்பான அமைப்பையும் துவக்கி உள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். இதன்காரணமாக வரலட்சுமி அரசியலில் இணைந்துவிட்டதாக செய்திகள் பரவின. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார்.
சத்யா படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வரலட்சுமி, நான் நடத்தும் சேவ் சக்தி அமைப்பு தொடர்பாக துணை முதல்வரை சந்தித்து பேசினேன். நான் அதிமுக., கட்சியிலோ, பிற கட்சியிலோ அல்லது என் அப்பாவின் கட்சியிலோ இணையவில்லை. எனக்கு இன்னும் நிறைய பொறுப்புகள் இருப்பதால், திருமணத்தை பற்றியும் இப்போதைக்கு யோசிக்கவில்லை என்றார்.