Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு ரசிகர்களை அடுத்தடுத்து அதிர வைக்கும் அனிருத்

13 டிச, 2017 - 10:28 IST
எழுத்தின் அளவு:
Anirudh-got-huge-response-in-Telugu-via-Pawan-Kalyan-film

தமிழ்த் திரையுலகில் ஒய் திஸ் கொலவெறி ஒரே பாடல் மூலம் உலக அளவில் பேசப்பட்டவர் அனிருத். தொடர்ந்து பல ஹிட் படங்களில், பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். கடந்த சில வருடங்களாகவே தெலுங்குத் திரையுலகில் அவரை அறிமுகப்படுத்து முயற்சிகள் நடந்து பின்னர் கைவிடப்பட்டன. இப்போது சரியான ஒரு படத்தில் அங்கு அறிமுகமாக உள்ளார். த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில், பவன் கல்யாண் நாயகனாக நடிக்கும் அஞ்ஞாதவாசி படத்தில் தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார் அனிருத்.

அப்படத்தின் பைட்டிக்கொச்சி சூஸ்தே... என்ற சிங்கிள் பாடல் கடந்த மாதம் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. நேற்று அடுத்த சிங்கிள் பாடலான காலி வாலுகா... என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பாடலையும் அனிருத் பாடியுள்ளார். இப்பாடலும் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அது மட்டுமல்ல இன்று காலை காலி வாலுகா.. பாடலின் மற்றொரு வெர்ஷனான பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஒரு பாராட்டுரை என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த பாடல் வீடியோவில் அனிருத் பாடி, ஆடி, நடித்திருக்கிறார். வீடுகள், கடைகள் அடங்கிய ஒரு செட்டில் பல இடங்களில் சுவற்றில், பேனர்களில் பவன் கல்யாண் நடித்த படங்களின், புகைப்படங்கள், போஸ்டர்கள் ஓவியமாகத் தீற்றப்பட்டு, கிராபிக்ஸ் மூலமும் சிறப்பிக்கப்பட்டு வெளியாகியுள்ள அந்தப் பாடலை பவன் கல்யாண் ரசிகர்கள் பாராட்டித் தள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

பவன் கல்யாணின் அஞ்ஞாதவாசி பட அறிமுகம் தெலுங்கில் அனிருத்துக்கு அமோக வரவேற்பைத் தரப் போகிறது என்பது மட்டும் இப்போதே தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in