ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1960களில் நடிகர் திலகத்தின் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற சரித்திர படமான கர்ணன் படம், மீண்டும் புதுப்பொலிவுடன் டிஜிட்டல் முறையில் தயாராகியுள்ளது. பி.ஆர்.பந்தலு இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், அசோகன், என்.டி.ராமாராவ், சாவித்திரி, தேவிகா, நம்பியார் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை ஜாம்பவான்கள் நடிப்பில் வெளியான படம் கர்ணன். இதில் கர்ணனாக நடிகர் திலகம் நடித்திருந்தார் என்று சொல்லுவதை விட, அந்த மகாபாரத கர்ணன் எப்படி வாழ்ந்திருந்தான் என்பதை நம் கண்முன் நிறுத்தினார் என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு அவருடைய நடிப்பு அளபரியது. பெற்ற தாய்கே வரம் அளித்த பெருமானாகவும், தர்மதேவனாகவும் அந்த படத்தில் தோன்றினார் நடிகர் திலகம்.
அப்படிப்பட்ட அந்த கர்ணன் படத்தின் சிறப்பை, இந்தக்கால தலைமுறையினரும் உணரும் விதமாகவும், அந்தப்படத்தை இயக்கி, தயாரித்து பி.ஆர்.பந்தலுக்கு இது 100வது ஆண்டும் என்பதாலும், அவரை கவுரவிக்கும் விதமாக இப்படத்தை, இந்தக்கால தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு டிஜிட்டல் முறையில் 5.1 சரவுண்ட் சிஸ்டத்தில் டி.டி.எஸ்., எபெக்குடன் மாற்றியுள்ளனர்.
புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ள கர்ணன் படத்தின் டிரைலர் வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத்தொடர்ந்து இப்படத்தை உலகம் முழுக்க ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.