ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித் நடிக்கும் படங்கள், தொடங்குவது முதல் படம் ரிலீசாவது வரை ஒவ்வொரு விசயங்களும் வியாழக்கிழமைகளில் தான் வெளியாகி வருகின்றன. அதேப்போல், வீரம், வேதாளம், விவேகம் என்று படங்களின் டைட்டீலை வி எழுத்தில் வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மீண்டும் சிவா இயக்கத்தில் தனது 58வது படமான விசுவாசத்தில நடிக்க தற்போது தயாராகிக்கொண்டிருக்கிறார் அஜித்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவிருக்கும் நிலையில், படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்ட சிவா, தற்போது படப்பிடிப்புக்கான பிரீ-புரொடக்சன்ஸ் வேலைகளை தொடங்கி விட்டார். அதன்காரணமாக, கடந்த வியாழக்கிழமை அன்று அந்த படத்தில் பணியாற்றும் சில டெக்னீசியன்களை வைத்து சிறிய அளவில் ஆபீஸ் பூஜை போட்டு வேலைகளை தொடங்கியிருக்கிறார். ஆனால் இந்த துவக்க விழாவிலும் வழக்கம்போல் அஜித் கலந்து கொள்ளவில்லை.