Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

எதையும் நேரடியாக பேசவே விரும்புகிறேன் : ரிச்சா சத்தா

07 டிச, 2017 - 15:54 IST
எழுத்தின் அளவு:
I-Like-my-Straight-Forward-Nature---Richa-Chadda

புக்ரே படத்தின் இரண்டாம் பாகமாக "புக்ரே ரிட்டர்ன்ஸ்" உருவாகி உள்ளது. வரும் வெள்ளியன்று ரிலீஸாகும் இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் நடிகை ரிச்சா சத்தா நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...

போலி பஞ்சாபன் கேரக்டருக்கும், உங்க வாழ்க்கைக்கும் எந்தளவு ஒற்றுமை உள்ளது?
என் ரியல் வாழ்க்கை நிச்சயம் போலி பஞ்சாபன் உடன் ஒத்து போகாது. ஏனென்றால் போலி கேரக்டரை பொறுத்தமட்டில் குழந்தை கடத்தல் உள்ளிட்ட பல கிரிமினல் வேலைகளை செய்பவள். அதனால் அந்த கேரக்டர் என் நிஜ வாழ்க்கையோடு எந்த விதத்திலும் ஒத்து வராது. நான் ஒருபோதும் அப்படியாக நினைத்தது இல்லை.

திகார் சிறையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த அனுபவம் குறித்து சொல்லுங்க?
உண்மை தான், திகார் சிறையில் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் எனக்கான காட்சி, சிறையின் வாயில் வரை மட்டும் தான், அதனால் உள்ளே நடந்த படப்பிடிப்பு அனுபவம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் வித்தியாசமாக சிறை இருந்தது. கைதிகள் எல்லோரும் அவரவர் வேலையை செய்து வந்தனர். அதேசமயம் சிறையில் ஆடல், பாடல் போட்டியெல்லாம் நடந்தது. அதை என்னால் ரசிக்க முடியவில்லை.

புக்ரே வெற்றியால் இப்படமும் வெற்றி பெறனும் என்கிற பயமோ அல்லது ஒரு அழுத்தமோ உள்ளதா?
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஷூட்டிங்கின் போது ஒருவித பயம் எனக்குள் இருந்தது. புக்ரேயில் என்னுடைய கேரக்டரை ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள், பாராட்டினார்கள். தற்போது புக்ரே படத்தின் பாடல்களுக்கும், டிரைலருக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். இது எனக்குள் நம்பிக்கையை தந்துள்ளது. கதை, இயக்குநர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என எல்லாமும் சிறப்பாக அமைந்துவிட்டால் நிச்சயம் படம் வெற்றி தான். இருந்தாலும் எனக்குள் ஒரு பயம் உள்ளது.

புக்ரே ரிட்டர்ன்ஸிலும் உங்களுக்கு நெகட்டீவ் கேரக்டர் மாதிரி தோன்றுகிறதே?
புக்ரேயில் நெகட்டீவ் கேரக்டர் என்று சொல்ல முடியாது. ஆனால், புக்ரே ரிட்டர்ன்ஸில் வில்லன் மாதிரியான கேரக்டர் தான். படத்தில் ஒரு முக்கியமான வில்லன் உள்ளார். டிரைலரில் அவரை காண்பிக்கவில்லை. படத்தில் பார்ப்பீர்கள்.

சினிமாவில் திறமை - சிபாரிசு எது முக்கியம்?
திறமை, சிபாரிசு இரண்டுக்கும் சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஒரு வித்தியாசம் இருக்கிறது. சிபாரிசு என்றால் உடன் வாய்ப்பு கிடைக்கும். திறமை சற்று தாமதமாக கிடைத்தாலும் அதற்கான வேலை சிறப்பாக இருக்கும். திறமை இருந்தால் நிச்சயம் உங்களை தேடி வாய்ப்பு வரும், அதுவே, உங்களது பெயரை சிலர் சிபாரிக்கவும் சொல்லும்.

எதையும் நேராக பேசக்கூடியவர் நீங்கள், இதனால் உங்களுக்கு ஏற்படும் நன்மை, தீமை என்ன?
நன்மை, தீமை என்று சொல்ல முடியாது. எதையும் நேராக பேசுவது எனக்கு இயற்கையாகவே அமைந்துவிட்டது. நான் இப்படி இருப்பது பிடித்திருக்கிறது. மக்களை பிரதிபலித்தே எனது கருத்தை நான் முன் வைப்பேன். நம் நாட்டில் பேச்சுரிமை உள்ளது. ஆகையால் எதையும் சொல்ல தயங்க வேண்டியது இல்லை. அதேப்போல் மற்றவர்களும் அவர்களின் கருத்தை சொல்ல தயங்க கூடாது.

Advertisement
தயாரிப்பாளரான சித்ரங்கடா சிங்தயாரிப்பாளரான சித்ரங்கடா சிங் ஆசியாவின் கவர்ச்சியான பெண் பிரியங்கா சோப்ரா ஆசியாவின் கவர்ச்சியான பெண் ...


வாசகர் கருத்து (1)

skv - Bangalore,இந்தியா
08 டிச, 2017 - 09:59 Report Abuse
skv<srinivasankrishnaveni> 1st go and put a blouse and and dress well and come horrrrrrible to see
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in