Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னை முன்மொழிந்தவர்களை காணவில்லை : விஷால்

07 டிச, 2017 - 14:02 IST
எழுத்தின் அளவு:
My-Proposers-are-missed-says-Vishal

சென்னை : என்னை முன்மொழிந்தவர்களை காணவில்லை, அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என விஷால் தெரிவித்துள்ளார்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களமிறங்கி, வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிராகரிக்கப்பட்டது. மாலை 3 மணிக்குள், தேர்தல் அலுவலரை சந்தித்து, விஷாலை முன்மொழிந்ததாக சொல்லப்பட்டு, பின்னர் அவர்கள் முன்மொழியவில்லை என்று கூறப்பட்ட அந்த இரண்டு நபர்களும் நேரில் விளக்கம் அளித்தால் அவரது மனு மறுபரிசீலனை செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னை தேர்தல் ஆணையம் அலுவலகம் வந்த விஷால் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது... என்னை முன்மொழிந்த சுமதி, தீபன் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை, அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இப்போது என் மனு ஏற்பதை விட அவர்களின் பாதுகாப்பு தான் ரொம்ப முக்கியம். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆர்.கே.நகரில் விஷால், பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. இதன்மூலம் விஷால், அந்த இரண்டு பேரையும் 3மணிக்குள் ஆஜர்படுத்துவது என்பது கடினம். ஆகையால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது நிரகாரிக்கப்பட்டது தான். அவர் போட்டியிடுவதற்காக இருந்த ஒரு வாய்ப்பும் கைநழுவி போய் கொண்டு இருக்கிறது.

Advertisement
நாச்சியார் வசனத்தால் பாதிக்கப்பட்டது யார்? கோர்ட் கேள்விநாச்சியார் வசனத்தால் ... மக்களுக்கு நல்லது செய்வதை யாராலும் தடுக்க முடியாது : விஷால் மக்களுக்கு நல்லது செய்வதை யாராலும் ...


வாசகர் கருத்து (4)

Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
08 டிச, 2017 - 10:59 Report Abuse
Tamizhan kanchi முன்மொழிந்த பத்து நபர்களை கூடவே வைத்து கொள்ளாமல் வேண்டாத வெட்டி கூட்டங்களை கூட்டிக்கொண்டு சமாதி சமாதியாக திரிந்து கடைசி நாள் என்று தெரிந்தும் நேரத்தை வீணடித்துக்கொண்டு ஏதோ திரைப்பட ஷூட்டிங் போல நடந்து தவறு செய்து பின் தேர்தல் அதிகாரிகளிடம் விதாண்டா வாதம் செய்து சிறுபிள்ளைத் தனமாக கெஞ்சி பின் சாலை மறியல் செய்து பார்க்க பரபரப்பாக இருந்ததே தவிர தேர்வான மற்ற சுயேட்சை வேட்பாளர்ளிடம் உள்ள திறமை கூட இல்லாத இவர் மக்கள் பிரதிநிதி ஆக தகுதி அற்றவரே..
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
07 டிச, 2017 - 19:52 Report Abuse
Shanu சினிமாவில் கடத்தி வைப்பது போல் இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் எதனை கோடி கிடைத்து உள்ளதோ?/ அரசியல்வாதிகள் என்றாலே கொலை கொள்ளை கடத்தல் எல்லாவற்றிலும் முதல் இடத்தில இருப்பார்கள். மனசாட்சி இருக்க கூடாது.
Rate this:
Karunan - udumalpet,இந்தியா
07 டிச, 2017 - 15:53 Report Abuse
Karunan முன்மொழிபவர்களை காசு கொடுத்து மூன்றாவது மனிதர் மூலம் வேட்புமனுவில் கையெழுத்து வாங்கிவிட்டு காணவில்லை என்றால் உனக்கெதட்கு அரசியல் .....இது எவ்வளுவு பரிதாபகரமானது ...நகைக்கமாட்டார்களா ?
Rate this:
sarathy -  ( Posted via: Dinamalar Android App )
07 டிச, 2017 - 15:37 Report Abuse
sarathy From yesterday onwards they are missing.But they are missing now.. Dont you know that yesterday? please go and act some where else
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in