Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் நாட்டை கடவுள் தான் காப்பாற்றனும் : விஷால்

07 டிச, 2017 - 11:39 IST
எழுத்தின் அளவு:
God-to-save-my-beloved-country-says-Vishal

என் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களமிறங்கி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பேட்டியளித்து வருகிறார். இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியையும் சந்தித்து முறையிட்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையம், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரையும் முறையிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், ஆர்கே.நகர் தேர்தலையொட்டி மீண்டும் டுவிட்டருக்கு வந்துள்ள விஷால், "ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும் என காத்திருக்கிறேன். செயலற்ற அரசுகளிடமிருந்து, நான் விரும்பும் என் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Advertisement
ஆண்தேவதை தலைப்பு ஏன்? இயக்குனர் தாமிரா விளக்கம்ஆண்தேவதை தலைப்பு ஏன்? இயக்குனர் ... அருவியில் நடிக்கத் தயங்கிய ஹீரோயின்கள் அருவியில் நடிக்கத் தயங்கிய ...


வாசகர் கருத்து (60)

Vaal Payyan - Chennai,இந்தியா
08 டிச, 2017 - 09:41 Report Abuse
Vaal Payyan இந்த நாட்டை முதலில் உங்க கையில இருந்து தான் ஆண்டவன் காப்பாத்தணும் திரையில் நடித்து நடித்து உங்களுக்கு எல்லாம் மரத்து விட்டது
Rate this:
Prem Kumar - Bangalore,இந்தியா
07 டிச, 2017 - 19:53 Report Abuse
Prem Kumar விஷாலின் மனு நிராகரிப்பை தொடர்ந்து இந்த நாட்டை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளார். உண்மையிலேயே ஆண்டவன் தான் இவரையும் தீபாவையும் சரிவர வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்து நாட்டை பெரிய சிக்கலில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்
Rate this:
kuthubdeen - thiruvarur,இந்தியா
07 டிச, 2017 - 19:40 Report Abuse
kuthubdeen எம்ஜிஆர் னு நினைப்பு ....அவன் அவன் தண்ணிகுடிக்கிறான் திமுகவையும் அண்ணா திமுகவையும் எதிர்க்க ..அரசியல்னா சும்மான்னு நினைச்சுட்டார் ...உறுதியான ஒரு பத்து பேரை வச்சுக்க தெரியல அவன் மிரட்டுறான் இவன் மிரட்டுறான்னு புலம்பல் ..நீ ஆறு அடி பாஞ்சா அவனுவ அறுபது அடி பாயுவானுவ ...ஆந்திரா ஓடி போய்டு அதான் உனக்கு இனி நல்லது .
Rate this:
N.Chidam@CBE - Doha,கத்தார்
07 டிச, 2017 - 17:32 Report Abuse
N.Chidam@CBE தம்பி , தமிழ் மக்களுக்கு நல்லது பண்ணனும்னு அடம் புடிக்கிறீங்க ,,, அது ஏன் தேர்தல்ல நின்னு MLA ஆகித்தான் பண்ணனுமா . அந்த பணத்தை வச்சு எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்யலாமே ... யோசிச்சு பன்னுப்பா
Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
07 டிச, 2017 - 17:24 Report Abuse
Jaya Ram வேணாம்பா ராசா நாங்க தமிழ் நாட்டை பார்த்துகிறோம் நீங்க ஆந்திராவில் போட்டிபோட்டு பார்லிமெண்டுக்கு இந்தியனா போங்க நாட்டை கப்பாத்துங்க
Rate this:
மேலும் 55 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in