ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |
பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகரும், இயக்குநருமான ஆர்.என்.கே.பிரசாத் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. கர்நாடக மாநிலம், பெங்களூரில் பிறந்த ஆர்.என்.கே.பிரசாத் பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கான பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு கன்னடத்தில் "பிரேமதா புத்ரி" எனும் படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து 80க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரசாத், தமிழிலும் "ரோசாப்பூ ரவிக்கைகாரி", "கவிக்குயில்", "சிட்டுக்குருவி" உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் சில சீரியல்களும் இயக்கி, நடித்தும் உள்ளார். மேலும் கமல்ஹாசனுடன் மைக்கேல் மதன காமராசன், நாயகன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னை, அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த பிரசாத் மாரடைப்பால் காலமானார். மறைந்த பிரசாத்துக்கு உஷா என்ற மனைவியும், ராஜிவ் பிரசாத் என்ற மகனும், ரத்னமாலா என்ற மகளும் உள்ளனர்.
மறைந்த பிரசாத்துக்கு கர்நாடக அரசு சார்பில் 2008-09ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது டாக்டர்.விஸ்ணுவர்தானா என்ற பெயரில் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஆர்.என்.கே.பிரசாத்தின் இறுதி சடங்குகள் இன்று(16.02.12) மாலையில் நடக்கிறது. மறைந்த பிரசாத்தின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர்.