பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கடந்த ஓணம் பண்டிகையின் போது மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் படம் கேரளாவின் ஓணம் கொண்டாட்ட பாடலாகவே மாறியது. குறிப்பாக அந்தப்பாடலுக்கு ஷெரில் என்பவர் தனது நடனக்குழு மூலம் நடனமாடி பாடலை இன்னும் பிரபலமாக்கினார். அதனால் கேரளாவையும் தாண்டி, தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களை ஆக்கிரமித்து, பல நாடுகளிலும் அந்தப்பாடல் வைரலாக மாறியது. அந்தப்பாடலுக்கு லேட்டஸ்ட்டாக மயங்கியவர் பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன் சமீபத்தில் இந்தப்பாடலை பார்த்த அபிஷேக் பச்சன், “ஜிமிக்கி கம்மல் பாடலை திரும்ப திரும்ப பார்ப்பதை நிறுத்த முடியவில்லை... செம” என தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.