ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு ஹீரோயின்களின் பஞ்சம் அதிகமாகிவிட்டது. முன்னணி நடிகர்களும் ஒரு படத்தில் அவர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகையுடன் மிஞ்சிப் போனால் இரண்டு முறை மட்டுமே ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். விஜய், அஜித் போன்ற நடிகர்கள் இனி காஜல் அகர்வால், நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடிப்பார்களா என்பது சந்தேகம்தான். முப்பது வயதைக் கடந்த அவர்களும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவமான படங்களில் நடிக்க ஆரம்பித்து தங்களது பாதையை மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.
தமிழில் அறிமுகமாகி சில படங்களில் நடித்து இங்கு ஜொலிக்காத ரகுல் ப்ரீத் சிங், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்தார். மீண்டும் 'ஸ்பைடர்' படம் மூலம் வந்தார். அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. இருந்தாலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் ரகுல் ப்ரீத் சிங்கைக் காப்பாற்றிவிட்டது. அவருடைய நடிப்பையும் பலரும் பாராட்டினார்கள். தொடர்ந்து அவர் ஏஆர்.முருகதாஸ், விஜய் மீண்டும் இணையும் படத்திலும் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அது பொய்யாகிவிடும் போலிருக்கிறது.
விஜய் ஜோடியாக 'பைரவா' படத்திற்குப் பிறகு மீண்டும் கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறார் என்று தெரிகிறது. 'விசுவாசம்' படத்தில் அஜித் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்துள்ளதால்தான் அவர் பக்கம் தமிழிலும் காற்று வீசுகிறது என்கிறார்கள்.