ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'சாட்டை'படத்தில் அறிமுகமான மகிமா நம்பியார், அடுத்து 'மொசக்குட்டி', 'குற்றம் 23' என பல படங்களில் நடித்தும் தமிழில் பெரிய அளவில் க்ளிக்காகவில்லை. அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் படம் சசிகுமாரின் 'கொடிவீரன்'படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மகிமா நம்பியார், அந்தப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்.
இந்த படம் தவிர ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'ஐங்கரன் படத்தில் நடித்து வரும் மகிமா நம்பியார், மு.மாறன் என்ற புதுமுக இயக்குநருடைய இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவை தவிர, மலையாளத்திலும் பிசியாக நடித்து வரும் மகிமா நம்பியார் இப்போது மம்முட்டியுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
'மாஸ்டர் பீஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மகிமா கல்லூரி மாணவியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது கேரளாவில் உள்ள, எர்ணாகுளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மம்முட்டி, மகிமா நம்பியாருடன் பூனம் பஜ்வா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
அருள் நிதி, சசிகுமார், ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து மம்முட்டியுடன் ஜோடி சேர்ந்திருப்பதன் மூலம் மகிமா நம்பியாரின் நட்சத்திர அந்தஸ்து மெல்ல உயர்ந்து வருகிறது.