ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு அனுஷ்கா திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு பாக்மதி படத்தில் நடித்து வந்த அவர், இப்போது அந்த படத்தை முடித்து விட்டார். ஜனவரியில் அப்படம் திரைக்கு வருகிறது. மேலும், இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகப்படுத்திய அனுஷ்காவினால் அதன்பிறகு ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாற முடியவில்லை.
இதனால் அனுஷ்கா ஆன்ட்டி தோற்றத்துக்கு மாறி விட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. அதனால் பாக்மதிக்கு பிறகு புதிய படத்திற்கு கமிட்டாவதற்கு முன்பு தனது உடல் எடையை குறைத்து விட வேண்டும் என்று தனது வீட்டிற்குள்ளேயே ஜிம் ரெடி பண்ணி கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் அனுஷ்கா. பல மாதங்களுக்குப்பிறகு கடந்த மாதம் ஒரு திருமண வீட்டில் தான் எடுத்துக் கொண்ட புகைப் படங்களை வெளியிட்டார். தற்போது தனது உடல்கட்டை மேலும் ஸ்லிம் பண்ணி விட்ட அனுஷ்கா, தனது ஹேர் ஸ்டைலை மாடர்னாக மாற்றி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையதளங்களில் வைரலாகியிருக்கிறது.