Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நவம்பர் 30ம் தேதி இரு படப் போட்டி மட்டுமே

28 நவ, 2017 - 12:44 IST
எழுத்தின் அளவு:
Nov-30-:-two-movies-clashing

2017ம் ஆண்டின் கடைசி சில வாரங்களில் இருக்கிறோம். நவம்பர் மாதத்தின் கடைசி வாரம் இது. பொதுவாக வெள்ளிக் கிழமைகளில் தான் படங்கள் வெளியாகும். ஆனால், இந்த மாதக் கடைசி நாளான 30ம் தேதியான வியாழக்கிழமை படங்கள் வெளியாகின்றன. அன்றைய தினம் 'அண்ணாதுரை, திருட்டுப்பயலே 2' ஆகிய இரண்டு படங்கள் முக்கிய போட்டியில் இருக்கின்றன.

சசிகுமார் நடித்த 'கொடிவீரன்' படமும் அன்று வெளியாவதாக இருந்த நிலையில், நேற்று படத்தின் வெளியீட்டுத் தேதியை டிசம்பர் 7ம் தேதிக்குத் தள்ளி வைத்திருக்கிறார்கள். படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவரான அசோக்குமாரின் திடீர் தற்கொலையைத் தொடர்ந்து பட வெளியீட்டில் சில சிக்கல்கள் எழுந்ததால் அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைத்துவிட்டார்கள்.

'அண்ணாதுரை' படத்தை அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி, டயானா சம்பிகா, மகிமா, ஜுல் மேரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனிக்கு 'பிச்சைக்காரன்' படத்தின் மாபெரும் வெற்றி அவரை வேறு ஒரு கட்டத்திற்குக் கொண்டு சென்றது. அதைத் தொடர்ந்து வந்த 'சைத்தான், எமன்' ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அந்தக் குறையை 'அண்ணாதுரை' படம் தீர்க்கும் என படக்குழுவினர் நம்பியுள்ளார்கள்.

'திருட்டுப்பயலே 2' படத்தை சுசிகணேசன் இயக்கியுள்ளார். பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பொதுவாக இரண்டாம் பாகம் என்றால் முதல் பாகத்தில் நடித்தவர்கள் தான் நடிப்பார்கள். ஆனால், இந்தப் படத்தை வேறு நடிகர்களை வைத்து உருவாக்கியிருக்கிறார்கள். பாபி சிம்ஹாவுக்கென தனி மார்க்கெட் தமிழ் சினிமாவில் கிடையாது. அமலா பால் இப்படத்தின் மிகவும் கிளாமராக நடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இயக்குனர் சுசிகணேசன் 8 வருடங்கள் கழித்து ஒரு தமிழ்ப் படத்தையும், 11 வருடங்கள் கழித்து 'திருட்டுப்பயலே' இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

இரண்டில் எது ரசிகர்களைக் கவரும் என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in