சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா. அதில் பசுபதி ஜோடியாக நடித்தார். அதன் பிறகு தொலைபேசி, திருத்தம், செங்காத்து பூமியிலே, வானம் பார்த்த பூமியிலே படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். கின்னஸ் புரொடக்ஷன் தயாரிப்பில், நவீன் கணேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தீயோருக்கு அஞ்சேல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்து வெயில் பிரியங்கா கூறியதாவது:
நான் கேரளாவில் பிறந்தாலும் என்னை நடிகையாக்கியது தமிழ் சினிமாதான். வெயில் படத்திற்கு கிடைத்த வரவேற்பில்தான் இன்று நான் நடிகையாக இருக்கிறேன். இடையில் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. காரணம் நல்ல கதைகள் அமையவில்லை. நடிக்க வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு படத்தில் நடிக்க விருப்பம் இல்லை. அதோடு மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் அமைந்ததால் அங்கேயே தொடர்ந்து நடித்து வந்தேன்.
இப்போது இரண்டு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதில் ஒரு படம்தான் தீயோர்க்கு அஞ்சேல். இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். துணிச்சலாக இருக்க வேண்டும் என்பதை சொல்கிற படம். ஹீரோயின் சப்ஜெக்ட் படம்.
தமிழ் சினிமா இப்போது நிறைய மாறி இருக்கிறது. இளைஞர்கள் புதிய சிந்தனையோடு படம் எடுக்க வருகிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கூட இளைஞர்கள் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். மற்ற மாநில சினிமாக்களுக்கு உதாரணமாக தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பேன் என்கிறார் பிரியங்கா.