விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'வேலைக்காரன்', டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினர்களுக்கு நன்றி கூறும் விதமாக மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சியை நடத்தினர். இதற்காக பல லட்சம் செலவில் செட் போடப்பட்டு படு ஆடம்பரமாக நடைபெற்றது.
இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் பாடல்களை டிசம்பர் 3-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'ரெமோ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தியதை போலவே இந்தவிழாவையும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தேங்க்ஸ் மீட்டுக்கே ஆடம்பரமாய் நடத்தியவர்கள், ஆடியோ வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாய் நடத்த உள்ளனர். பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருடன் வேலைக்காரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் நயன்தாராவும் கலந்து கொள்கிறார். இந்த தகவலை ரகசியமாக வைத்துள்ளனர்.