ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'இவன் தந்திரன்' படத்தைத் தொடர்ந்து அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் கண்ணன். இந்த படத்தின் கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக 'ஒரு பக்க கதை', தனுஷ் ஜோடியாக 'என்னை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ். ஒரு பக்க கதை, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரண்டு படங்களுமே முடிடைந்த நிலையில் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது.
அதனால் தனக்கு ராசியில்லாத நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தார். அவரது அச்சத்தை போக்கும் வகையில் தற்போது அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் படவாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்தப் படமாவது குறிப்பிட்டதேதியில் வெளியானால் சரிதான்.