Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான்காவது முறை வாய்ப்பு, சிவாவின் விசுவாசம் காரணமா ?

23 நவ, 2017 - 16:23 IST
எழுத்தின் அளவு:
Why-Ajith---Siva-fourth-time?

தமிழ்த் திரையுலகத்தில் படம் ஓடினாலும், ஓடவில்லை என்றாலும் அஜித்துக்கு இருக்கும் 'மாஸ்' தனி. ரசிகர் மன்றங்களை அவர் எப்போதோ கலைத்துவிட்டாலும், ரசிகர் மன்றம் இருந்த போது இருந்த ரசிகர்களை விட அஜித்துக்கு இப்போது இருக்கும் ரசிகர்கள் அதிகம்.

மாஸ் ஹீரோவாக மாறிவிட்டாலே படத்துக்குப் படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தியாக வேண்டும். ஆனால், அஜித் விஷயத்தில் அது 'மங்காத்தா' படத்திற்குப் பிறகு 100 சதவீதம் நடக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 'வேதாளம்' படம் மட்டுமே கொஞ்சம் திருப்திப்படுத்தியது. சமீபத்தில் வந்த 'விவேகம்' படம் அஜித் ரசிகர்களை நிறையவே ஏமாற்றிவிட்டது.

இதுவரை அஜித்தை அதிக முறை இயக்கியவர்கள் பட்டியலில் இருந்த இயக்குனர் சரணை விட சிவா ஒரு எண்ணிக்கை அதிகமாகி நான்காவது படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டார். கே.எஸ்.ரவிக்குமார் இரண்டு படங்களையும், விஷ்ணுவர்தன் இரண்டு படங்களையும், எழில் இரண்டு படங்களையும், கே.சுபாஷ் இரண்டு படங்களையும், ராஜ்கபூர் இரண்டு படங்களையும், செல்வா இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார்கள். இவர்களைக் காட்டிலும் சிவா நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றதற்குக் காரணம் அவருடைய 'விசுவாசம்'தான் காரணம் என்கிறார்கள்.

அஜித்துக்குப் பிடித்த விதத்தில் அவர் நடந்து கொள்வதும், அஜித் எதைச் சொல்கிறாரோ அதற்கேற்றபடி சிவாவும் மாறிக் கொள்வதும் தான் அஜித்துக்கு சிவாவை அதிகம் பிடிக்க வைத்துவிட்டது என்று திரையுலகத்தில் சொல்கிறார்கள்.

'விவேகம்' படம் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீர்கள் அடுத்த வாய்ப்பும் உங்களுக்குத்தான் என்று அப்போதே அஜித் சொன்னதை தற்போது செயலிலும் காட்டிவிட்டார். அதற்காகவே 'விசுவாசம்' படத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்வேன் என சிவா கூறியுள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in