மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் அனிருத். அந்த படத்தில் அனிருத் இசையில் தனுஷ் எழுதி பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் பட்டிதொட்டியெல்லாம் கலக்கியது.
ஆனால் அதையடுத்து வேலையில்லா பட்டதாரி படம் வரை அவர்களது கூட்டணி தொடர்ந்து நிலையில், திடீரென்று அவர்களுக்கிடையே விரிசல் விழுந்தது. இதனால் தனுஷ் படங்களுக்கு ஷான் ரோல்டன் உள்ளிட்ட பிற இசையமைப்பாளர்கள் இசையமைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், 2018ம் ஆண்டில் தனுஷ் ஹிந்தியில் நடிக்கயிருக்கும் ஒரு படத்தில் அனிருத் இசையமைக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை விரைவில் தனுஷே உறுதிப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.
2013ல் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்த டேவிட் படத்தில் இடம்பெற்ற ஐந்து இசையமைப்பாளர்களில் அனிருத் இடம்பெற்றிருந்தார். அந்த வகையில், ஏற்கனவே ஹிந்தியில் ஒரு பாடல் மூலம் அனிருத் அறிமுகமானபோதும், தனுஷ் படம் மூலம் ஒரு முழு இந்தி படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
ஆக, தமிழில் இருந்து தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், பவன் கல்யாண் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், அடுத்தபடியாக பாலிவுட்டையும் கலக்கப்போகிறார்.