Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஊழல் அரசியல்வாதிகளை விரட்ட எல்லா நடிகர்களின் ரசிகர்களும் இணைய வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர்

23 நவ, 2017 - 11:05 IST
எழுத்தின் அளவு:
All-fans-be-unity-to-out-Pribe-Politicians-says-SA-Chandrasekar

“வெண்ணிலா வீடு” படத்தின் இயக்குநர் வெற்றி மகாலிங்கம் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடித்திருக்கிறார்கள். ரெமோனா ஸ்டெபனி என்ற புதுமுகம் ஹீரோயின். இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகிய மூவர் பணியாற்றியிருக்கிறார்கள். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:

சினிமா வேறு, அரசியல் வேறு, வாழ்க்கை வேறு. சினிமாவில் கொடூரமான வில்லன்களாக நடிப்பவர்கள் நேரில் குழந்தை மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேபோல் நம்மோடு குழைந்து பேசுபவர்களும் சில நேரங்களில் நம் கழுத்தறுத்து விடுவார்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் கலைஞரை கைது செய்த போது, கண்டித்து ஒரு பக்க அளவிற்கு பத்திரிக்கையில் கண்டனம் செய்தவன் நான்.

நான் எந்த கட்சியையும் சாராதவனாக இருந்தாலும், கலைஞரை எனக்கு பிடிக்கும் என்கிற காரணம் தான் அது. ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் அவரது கம்பெனியில் படம் இயக்க என்னை ஒப்பந்தம் செய்தார். அப்படித்தான் அப்போதைய அரசியல்வாதிகள் இருந்தார்கள். அவர்கள் அரசியலையும் சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்தறிகிற ஆற்றலும், நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள்.

ஆனால், இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கெல்லாம் அந்த பக்குவமும், நம்பிக்கையும் இல்லை. எங்கே ஏதாவது ஒரு நடிகன் நாடாள வந்துவிடுவானோ? என்ற பயத்திலேயே இருக்கிறார்கள். அதனால் தான் இவர்களால் சினிமாவையும், அரசியலையும் வேறு வேறாக பிரித்தறிய முடியவில்லை.

இந்தப் படம் அஜித், விஜய் ரசிகர்கள் மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். இந்த பிரச்சனை இப்போது மட்டும் இல்லை, எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்திற்கு முன்பிருந்தே தொடங்கிய ஒன்று. ரசிகர்களே சூப்பர் ஸ்டார்களை உருவாக்குகிறார்கள், ரசிகர்கள் இல்லாவிட்டால் இங்கு சூப்பர் ஸ்டார்கள் இல்லை. இந்த சூப்பர் ஸ்டார்களின் ரசிகர்கள் மோதிக்கொண்டாலும், நடிகர்கள் நண்பர்களாக ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். அதனை உணர்ந்து இரு தரப்பு ராசிகர்களும் ஒன்றிணைந்தால் புது சரித்திரத்தையே இங்கு உருவாக்க முடியும்.
அதேப்போல எல்லா நடிகர்களுடைய ரசிகர்களும் ஒன்றிணைந்தால் தவறு செய்கிற அரசியல்வாதிகள் எல்லாம் தலைதெறிக்க ஓடி விடுவார்கள். ஊழல்வாதிகள் எல்லாம் ஒழிந்து போவார்கள். மெரினாவில் கூடிய இளைஞர் பட்டாளமே அதற்கு சான்று. இளைஞர்கள் வந்துவிட்டார்கள், இனி எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளவும்.

நான் பாஜகவையும் சேர்த்து தான் சொல்கிறேன். தமிழர்கள் நாங்கள் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற கோட்பாட்டில் வாழ்பவர்கள். இங்கு தேவையில்லாமல் ஜாதியையும், மதத்தையும் ஏன் திணிக்கிறீர்கள்? நாடாள்கிற ஒரு கட்சியின் முக்கியமான பதவியிலிருக்கும் ஒருவர் பொறுப்பில்லாமல் ஜாதி, மத அடிப்படையிலான கருத்துக்களை சொல்வது எவ்வளவு மோசமான செயல்?

இங்கிருக்கிற அரசியல்வாதிகள் எல்லாம் படத்தைப் பார்க்காமலேயே விமர்சனம் செய்யக் கிளம்பி விடுகிறார்கள். படத்தில் எந்த மாதிரியான சூழ்நிலையில் அந்த வசனம் இடம்பெறுகிறது என்பதைக் குறித்து எந்த கவலையும் இல்லை. தயவு செய்து மற்ற மாநிலங்களில் இருப்பது போல் தமிழ் சினிமாவை வாழவிடுங்கள்.

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.

Advertisement
ஹரிவாராசனம்... பாடலில் திருத்தம் செய்ய எதிர்ப்புஹரிவாராசனம்... பாடலில் திருத்தம் ... அறம் படத்தில் நயன்தாராவின் சேலை ரகசியம் அறம் படத்தில் நயன்தாராவின் சேலை ...


வாசகர் கருத்து (17)

Shanu - Mumbai,இந்தியா
23 நவ, 2017 - 17:43 Report Abuse
Shanu மத பிரிவினை நம் தமிழ்நாட்டில் கொஞ்சம் கூட கிடையாது. இது மட்டும் நுழைந்தால், தமிழ்நாடு அழிந்து விடும். பிஜேபி மத பிரிவினையை உண்டாக்குகிறது. இதை முளையிலே தடுக்க வேண்டும். தமிழக மக்கள் யாரையும் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள். பிஜேபியை தவிர. வட இந்தியர்களை தமிழ்நாட்டுக்குள் விடாதீர்கள். ஒரு பிஜேபி தலைவர் சொல்லுகிறார், கேன்சர் பாவம் செய்தவர்களுக்கு தான் வருமாம். இது என்ன பேச்சு முட்டாள்தனமான பேச்சு. எவ்வளவோ நல்லவர்கள் பல நோயினால் கஷ்டப்படுகிறார்கள் பல நல்லவர்கள் குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். பல குற்றவாளிகள் தான் உடல்நலத்துடன் இருக்கிறார்கள். பல நல்லவர்களுக்கு திருமணம் ஆகாமல் கூட இருக்கும். பல நல்லவர்கள், தவறே செய்யாமல் விவாகரத்து வாங்கி கணவன் மனைவி பிரிந்து இருப்பார்கள். ஜாதி மத பிரிவினைகள் கொண்டு வருபவர்களை தமிழ்நாட்டினுள் விடாதீர்கள்.
Rate this:
பாரதி - Chennai ,இந்தியா
23 நவ, 2017 - 14:00 Report Abuse
பாரதி சந்திரசேகர் அண்ணே . சாதி மதத்தை வைத்து சினிமா காரர்கள் படம் எடுத்து பணம் பண்ணலாமா? அதை அரசியல் வாதி செய்தால் தவறா? என்ன யோக்கியமான பேச்சு உங்கள் பேச்சு .
Rate this:
பாரதி - Chennai ,இந்தியா
23 நவ, 2017 - 13:58 Report Abuse
பாரதி சினிமாவை ஒழித்தால் கள்ள பணம் கருப்பு பணம் ஓரளவிற்கு ஒழியும் என்று நினைக்கிறேன் .
Rate this:
varun - tamilnadu,இந்தியா
23 நவ, 2017 - 13:50 Report Abuse
varun நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கிக்கொண்டு டிக்கெட் விலையை ஆயிரம் ,ரெண்டாயிரம் என்று விற்க நிர்பந்திப்பதும் ஊழல் தான் இயக்குனரே .......
Rate this:
sankar - Nellai,இந்தியா
23 நவ, 2017 - 13:42 Report Abuse
sankar அதெல்லாம் ஒழுங்கா வரி காட்டுகிறவன் பேசணும்
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in