ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் விரைவில் ரிலீஸாக உள்ளது. மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பஹத் பாசில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது.
இந்த படத்தின் சென்னை சிட்டி விநியோக உரிமையை எஸ்.பி.ஐ.சினிமாஸ் வாங்கிய நிலையில் மற்ற ஏரியாக்கள் ஓப்பனாகவே இருந்தது. வேலைக்காரன் படத்தை கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் செங்கல்பட்டு ஏரியாவை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அவுட்ரைட், எம்.ஜி. அடிப்படையில் வாங்காமல் டிஸ்ட்ரபியூஷன் அடிப்படையில் வாங்கியிருப்பதாக தகவல்.