ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
'ஆம்பள' படத்தின் மூலம் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் சுந்தர்.சி. அவரே தன்னுடைய தயாரிப்பில் 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் ஆதியை இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகப்படுத்தினார்.
சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'மீசைய முறுக்கு' படம் கமர்ஷியலாக வெற்றியடைந்து பெரிய லாபத்தைக் கொடுத்தது. மீசைய முறுக்கு படம் வெற்றியடைந்ததால், ஆதியைத் தேடி பல வாய்ப்புகள் குவிந்தன. அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்கான கதையை பலரிடமும் கேட்டு வந்த ஆதி, இப்போதுதான் தனக்கான கதை ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளார்.
ஆதி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் இந்த புதிய படம் மீண்டும் சுந்தர்.சியின் பேனரிலேயே உருவாகவிருக்கிறது. இந்தப் படத்தை இயக்கப்போவது ஆதி அல்ல, அறிமுக இயக்குனர் பார்த்திபன் என்பவர் இயக்குகிறார்.
இந்தப்படத்தில் ஹாக்கி பிளேயராக நடிக்கிறார் ஆதி. அதற்காக தற்போது தினமும் ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் ஆதி. படத்தின் கதாநாயகி, மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.