14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
விஜய் நடிப்பில் மெர்சல் படத்தை தயாரித்து, தமிழகம் முழுக்க சொந்தமாக வெளியிட்டது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். இதோடு ஜிவி பிரகாஷ் படம், சங்கமித்ரா படம் என அடுத்தடுத்து சில படங்களை தயாரிக்கிறது. அதோடு, தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலை அந்நிறுவனத்தை சேர்ந்த ஹேமா ருக்மணியே அறிவித்துள்ளார்.
தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்தப்படம் முழுக்க அமெரிக்காவில் படமாகிறது. இதில் முக்கிய வேடத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கிறார். தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
வட சென்னை படத்தை முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இந்தப்படத்தை ஒருவேளை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவில்லை என்றால் தானே தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் தனுஷ்.