Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மிகுந்த மன வேதனையில் அறம் இயக்குநர்

20 நவ, 2017 - 17:19 IST
எழுத்தின் அளவு:
Aramm-director-is-very-Distress

சமீபத்தில் நயன்தாராவின் துணிச்சலான நடிப்பில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற படம் அறம். இந்த பாராட்டுதலுக்கு ஒட்டு மொத்த சொந்தக்காரர் இயக்குநர் கோபி நயினார் தான். படம் பாராட்டுகளை பெற்றாலும் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார் இயக்குநர். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோபி நயினார்...

ஆழ்துளை கிணற்றில் பல குழந்தைகள் தவறி விழுவதை டிவிக்களில் பார்த்து தான் அறம் கதையை எழுதினேன். இந்தப்படத்தை நயன்தாரா தயாரிப்பார் என்று தான் அவரிடம் கதை சொன்னேன், ஆனால் அவரே நடிப்பார் என எதிர்பார்க்கவில்லை. அதனால் வசனங்களை கொஞ்சம் வீரியமாக எழுதினேன்.

என்ன நயன்தாரா ஹீரோயிசம் பண்ணுகிறார் என்று பலர் கேட்டனர், எத்தனை நாளைக்கு தான் நடிகர்கள் ஹீரோயிசம் பண்ணுவது, ஹீரோயின்கள் நடிக்கட்டும் என்று சொன்னேன். இங்கு யாரும் கிளாமர் நடிகைகள் கிடையாது. ஆனால் அவர்கள் அப்படி நடிக்க வற்புறுத்தப்படுகிறார்கள். நிறைய ஐஏஎஸ்., அதிகாரிகள், ஓய்வு பெற்ற அரசியல் தலைவர்கள் அறம் படத்தை பாராட்டினார்கள்.

இப்படி ஒரு தரமான படத்தை கொடுத்த என்னால் அந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை. நள்ளிரவில் போன் செய்து என் குடும்ப பெண்களை எல்லாம் இழுத்து தவறான வார்த்தைகளை சொல்லி திட்டுகிறார்கள். இதனால் நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன்.

எதுவாக இருந்தாலும் நான் நேரடியாக அமர்ந்து விவாதம் செய்ய தயாராக உள்ளேன். ஆனால் அப்படி இல்லாமல் சமூக வலைதளங்களில் என்னை சாடுகிறார்கள். தொடர்ந்து நான் நம்முடைய பிரச்னைகளுக்கான விஷயங்களை தான் படமாக்க போகிறேன். ஒருவேளை எனக்கு சினிமாவில் வாய்ப்பே கிடைக்காவிட்டால் வாட்ச்மேன் வேலைக்கு கூட போவேனே தவிர மசாலா கதைகளுக்கு நான் செல்லமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
'காற்று வெளியிடை' தோல்வி, கார்த்தியைக் காப்பாற்றிய 'தீரன்''காற்று வெளியிடை' தோல்வி, ... தீபிகா தலையை பாதுகாக்க வேண்டும்: கமல் தீபிகா தலையை பாதுகாக்க வேண்டும்: ...


வாசகர் கருத்து (29)

Karthik - Singapore,சிங்கப்பூர்
21 நவ, 2017 - 11:06 Report Abuse
Karthik ஐயா தாங்கள் கவலை படாதீர்கள். உண்மையான மனிதர்கள் உங்கள் பக்கம். சில மூடர் கூட்டங்கள் எல்லாவற்றுக்கும் குற்றம் சொல்வார்கள். சமீப காலமாக தகாத வார்த்தைகள் கூட உபயோகிக்கிறார்கள். தமிழனா இப்படி இன்று எண்ணி வியந்துள்ளேன். எனினும் கால போக்கில் சரியாகிவிடும். மீண்டும் இதே மாதிரி தரமான படங்கள் எடுங்கள். நடிகைகளை அடிக்கடி இந்த மாதிரி நல்ல கதாபாத்திரத்தில் பார்க்க ஆசை.
Rate this:
Arasan - chennai,இந்தியா
21 நவ, 2017 - 11:06 Report Abuse
Arasan மிரட்டலுக்கெல்லாம் பயந்தால் நல்ல விஷயங்களை யார்தான் கொடுப்பது... துணிவே துணை.... வாழ்த்துக்கள்
Rate this:
raghavan mageswary - chennai,இந்தியா
21 நவ, 2017 - 10:27 Report Abuse
raghavan mageswary சமுதாய பணியை தான் செய்யும் தொழிலில் இருந்தும் செய்யலாம் என்பதை இந்த இயக்குனர் நிரூபித்துள்ளார். சமுதாய சீர்திருத்தத்திற்காக செய்யப்படும் எந்த பணிக்கும் கிடைக்கும் அச்சறுத்தல் தான் இவருக்கு கிடைத்துள்ளது. ஒரு சிறந்த பணியினை செய்து முடிக்கும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தியை விட சிறந்தது வேறு ஒன்றும் இல்லை. எத்துயர் வந்தாலும் தன் நிலையை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று சொல்லும் இந்த இயக்குனரின் மனப்பக்குவம் நம் எல்லோருக்கும் வர வேண்டும். அச்சறுத்தல் செய்பவர்களை அலட்சியப்படுத்தாமல் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
Rate this:
R Thirunarayanan - CHENNAI,இந்தியா
21 நவ, 2017 - 09:59 Report Abuse
R Thirunarayanan உங்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Krishna Prasad - Chennai,இந்தியா
21 நவ, 2017 - 09:22 Report Abuse
Krishna Prasad இந்த மாதிரி ஒரு கான்செப்ட் எடுப்பதற்கே தைரியம் வேண்டும். தைரியமாக இந்த மாதிரி பல முயற்சியில் இறங்குங்கள்.
Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in