ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1965ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். ஜெயலலிதா, நம்பியார், நாகேஷ், ஆர்.எஸ்.மனோகர் நடித்திருந்தனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். பி.ஆர்.பந்துலு இயக்கி இருந்தார். பத்மினி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.
அந்த காலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய இந்தப் படம் இப்போதும் மக்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் இந்தப் படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி நவீன தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்தார். அப்போதும் வெற்றிகரமாக ஓடியது.
ஆயிரத்தில் ஒருவனுக்கு மேலும் ஒரு சிறப்பாக வருகிற டிசம்பர் 20ந் தேதி நடக்க இருக்கும் கோவா சர்வதே திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் கூறியிருப்பதவாது:
டிசம்பர் 20ந் தேதி கோவாவில் தொடங்க உள்ள 48வது உலக திரைப்பட விழாவில் புரட்சி தலைவரும் புரட்சி தலைவியும் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பங்குபெற தேர்வாகியுள்ளது. அதனை டிஜிட்டலில் வடிவமைத்தவன் என்ற முறையில் எனக்கு விமான டிக்கட், மற்றும் நட்சத்திர விடுதியில் உபசரிப்பு போன்றவைகளுடன் விழாவில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு அழைப்பு அனுப்பியுள்ளது, எங்கள் முயற்சிக்கு கிடைத்த மரியாதை என பூரிப்படைகிறேன். இதனை எற்பாடு செய்த அனைவர்க்கும் எனது பணிவான நன்றியினை தெறிவித்துக்கொள்கிறேன்.