ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஒரு மொழியில் வெற்றி பெற்ற படத்தின் கதையை தழுவி மற்ற மொழிகளில் படம் இயக்குவது சகஜமாகி விட்டது. ஆனால், சிலர் ஒர்ஜினல் படத்தைப்போலவே சரியாக இயக்கி வெற்றி பெற்றபோதும், சிலரோ, காப்பியடித்தும் சொதப்பி விடுகிறார்கள். அதேபோல் சில படங்களின் பர்ஸ்ட் லுக் வெளியானதும், அதே சாயலில் ஏற்கனவே வெளியான ஹாலிவுட் படங்களின் பர்ஸ்ட் லுக்கையும் சேர்த்து ரசிகர்களே இணையதளங்களில் வெளியிட்டு விடுகிறார்கள்.
இந்த நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா படம் வெளியானபோது அந்த படம் ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அப்போது அதற்கு விளக்கம் கொடுக்காத வெங்கட்பிரபு சமீபத்தில் ஒரு படவிழாவில் அதுபற்றி பேசினார்.
அதாவது, திருட்டு சம்பந்தமான கதையில் எந்த படத்தை இயக்கினாலும் உடனே ஹாலிவுட் படத்தின் காப்பி என்று சொல்லி விடுகிறார்கள். நான் இயக்கிய மங்காத்தா படத்தை அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் நான் எந்த படத்தையும் தழுவி அந்த படத்தை எடுக்கவில்லை. திருட்டு என்ற ஒரு கருவை மட்டுமே வைத்து இயக்கினேன் என்றார் வெங்கட்பிரபு.