ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் டுவிட்டரில் அவர் டிரெண்ட்டிங்கில் உள்ளார். '#HBDLadySuperStarNayanthara என்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. திரையுலகினர், ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் நயன்தாராவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனும் தன் டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளதோடு, அவருடன் இணைந்து எடுத்த போட்டோவையும் DP-யாக வைத்துள்ளார்.
விக்னேஷ் சிவன் தன் டுவிட்டர் பதிவில், "நான் பார்த்து கொண்டிருக்கும் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் தைரியமாகவும், அழகாகவும் இரு. நயன்தாரா என்றால் யார் என்று சொல்லும் வகையிலான கதைகளை கொடு, உன்னை நினைத்து எப்போதும் பெருமையாக உள்ளது. உன் மீது அதிக அன்பும், மரியாதையும் உள்ளது என் தங்கமே...! என்று கூறியுள்ளார்.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால் இதை இருவரும் வெளிப்படையாக இன்னும் சொல்லாமல் இருக்கிறார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வந்தபோது, அமெரிக்காவில் போய் இருவரும் கொண்டாடி விட்டு திரும்பியது குறிப்பிடத்தக்கது.