மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழ் அறிஞர்கள் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார்கள். உலக அளவில் அதற்கான நிதி திரட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழ அரசு 10 கோடி ரூபாய் நிதி அறிவித்தது. தொடர்ந்து விஷால் ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்தார்.
இப்போது நடிகர் கமல்ஹாசனும் தன் பங்கிற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கமல், இந்த நிதியை அளித்தார்.
இந்நிகழ்வில் லண்டனைச் சேர்ந்த முனைவர் ஆறுமுகம் முருகையா, அமெரிக்காவைச் சேர்ந்த கால்டுவெல் வேல்நம்பி, எழுத்தாளர் சுகா, பேராசிரியர் ஞானசம்பந்தம் உடனிருந்தனர்.