14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை ராம் கோபால் வர்மா, கேதி ரெட்டி ஜெகதீஸ்வர் உள்ளிட்டேர் படமாக்கி வருகிறார்கள். ராம் கோபால் வர்மா பார்வதியின் என்டிஆர்., என்ற பெயரில் படம் எடுக்கிறார்.
கேதி ரெட்டி ஜெகதீஸ்வர், லெட்சுமியின் வீர்கிராந்தம் என்ற பெயரில் படம் எடுக்கிறார். இதில் ஜெகதீஸ்வர் இயக்கும் படத்தில், லட்சுமி பார்வதியாக ஜூலி-2 படத்தில் நடித்துள்ள ராய் லட்சுமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதை மறுப்பது போன்று ஆச்சர்யத்துடன் கூடிய எமோஜியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராய் லட்சுமி. இதன் மூலம் அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை என தெரிகிறது.