ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
திரைத்துறையினருக்கு தமிழக அரசு, கலைமாமணி விருது வழங்குவது போன்று, ஆந்திர அரசு, நந்தி விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி ஆந்திர அரசு 2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.
இதில் நடிகர்கள் கமல் மற்றும் ரஜினிக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கமலுக்கு 2014-ம் ஆண்டிற்கான என்டிஆர்., தேசிய விருதும், ரஜினிக்கு 2016-ம் ஆண்டிற்கான என்டிஆர்., தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுகள் விபரம்...
சிறந்த நடிகர்
2014 : பாலகிருஷ்ணா (லெஜெண்ட்)
2015 : மகேஷ் பாபு (ஸ்ரீமந்துடு)
2016 : ஜூனியர் என்டிஆர்., (ஜனதா கேரேஜ்)
சிறந்த படம்
2014 : லெஜெண்ட்
2015 : பாகுபலி முதல் பாகம்
2016 : பெல்லி சூப்புலு
சிறந்த நடிகை
2014 : அஞ்சலி (கீதாஞ்சலி)
2015 : அனுஷ்கா ஷெட்டி (சைஸ் ஜீரோ)
என்டிஆர்., தேசிய விருது
2014 : கமல்ஹாசன்
2015 : ராகவேந்திர ராவ்
2016 : ரஜினிகாந்த்