ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாட்டில் மற்ற மொழிகளிலிருந்து டப்பிங் ஆகி வரும் படங்கள் மிகவும் குறைவுதான். தெலுங்கிலிருந்துதான் அதிகமான டப்பிங் படங்கள் வரும். அதுவும் சமீப காலங்களில் மிகவும் குறைந்துவிட்டது. அப்படியே வந்தாலும் அந்தப் படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவதில்லை. அதே சமயம், தமிழிலிருந்து தெலுங்கிற்கு அதிகமான படங்கள் டப்பிங் ஆகி வெளியாகின்றன. அவற்றில் சில படங்கள் உரிமை வாங்கப்பட்ட விலைகளை விட அதிகம் வசூலித்து லாபத்தை ஈட்டித் தருகின்றன.
அந்த வரிசையில் தற்போது விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மெர்சல்' படத்தின் தெலுங்குப் பதிப்பான 'அதிரிந்தி' இடம் பெற்றுள்ளது. இப்படம் கடந்த வாரம் 9ம் தேதி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சுமார் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. அடுத்த நாள் தெலுங்கில் நேரடியாக எடுக்கப்பட்ட 'கேர் ஆப் சூர்யா, ஒக்கடு மிகிலாடு' ஆகிய படங்கள் வெளிவந்தன. அதற்கு முந்தைய வாரம் 'பிஎஸ்வி கருட வேகா, நெக்ஸ்ட் நுவ்வே, ஏஞ்சல்' ஆகிய படங்கள் வெளிவந்தன.
இந்த நேரடித் தெலுங்குப் படங்களையெல்லாம் முந்திவிட்டு கடந்த வார பாக்ஸ் ஆபிசில் 'அதிரிந்தி' படம்தான் முதலிடத்தில் இருந்ததாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் மூலம் விஜய் தெலுங்கிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
தெலுங்கில் அவருடைய முதல் பெரிய வெற்றியாக 'அதிரிந்தி' அமைய உள்ளதாம். ஏற்கெனவே, தமிழ்நாட்டைத் தவிர, கேரளா, கர்நாடகாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தைச் சேர்த்திருக்கம் விஜய், 'அதிரிந்தி' வெற்றி மூலம், ஆந்திரா, தெலுங்கானாவிலும் புதிய ரசிகர்களைச் சேர்க்க ஆரம்பித்துள்ளார். இனி, விஜய்யை தென்னிந்திய ஸ்டார் என தாராளமாக அழைக்கலாம்.