Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.250 கோடியைத் தாண்டுமா 'மெர்சல்'?

13 நவ, 2017 - 15:53 IST
எழுத்தின் அளவு:
Did-Mersal-will-cross-Rs.250-crore?

தீபாவளியன்று வெளியான 'மெர்சல்' இந்த வாரத்துடன் ஒரு மாதத்தைக் கடக்க உள்ளது. கடந்த வாரம் 9ம் தேதி தெலுங்கு டப்பிங்கான 'அதிரிந்தி'யும் வெளியாகி விஜய்யின் முந்தைய டப்பிங் படங்களைக் காட்டிலும் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடி வருகிறது. முதல் நான்கு நாட்களில் சுமார் 7 கோடி வரை இப்படம் வசூலித்திருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு உரிமை விலையான 5 கோடியைத் தாண்டி தற்போது லாபத்தில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

விஜய் நடித்து இதற்கு முன் அங்கு டப்பிங் ஆகி வெளியான 'நண்பன்' படத்தின் ரீமேக்கான 'சிநேகிதடு' படம் 10 கோடி வரை வசூலித்து விஜய்யின் தெலுங்கு டப்பிங் படங்களில் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'அதிரிந்தி' விரைவில் முறியடித்துவிடுமாம். இந்த வார முடிவிற்குள் 'மெர்சல்' படத்தின் மொத்த வசூல், தெலுங்கு வசூலையும் சேர்த்து 250 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

'மெர்சல்' படம் தமிழில் மட்டுமே சுமார் 240 கோடி வரையில் வசூலித்திருக்கலாம் என்ற ஒரு தகவலும் உள்ளது. நேற்று கூட தமிழ்நாட்டில் ஓடிக் கொண்டிருக்கும் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டு தொங்கியதாம். 'எந்திரன், கபாலி' ஆகிய படங்களின் தமிழ் வசூலுடன் ஒப்பிடும் போது 'மெர்சல்' வசூலே அதிகம் என்கிறார்கள்.

Advertisement
புதுச்சேரி காருக்கு கேரளாவில் வரி கட்டமாட்டாராம் அமலாபால்புதுச்சேரி காருக்கு கேரளாவில் வரி ... மற்ற படங்களுக்கும் வருவாரா நயன்தாரா ? மற்ற படங்களுக்கும் வருவாரா நயன்தாரா ...


வாசகர் கருத்து (2)

13 நவ, 2017 - 17:37 Report Abuse
DuraiChellam புளுகுரத்துக்கு ஓரு அளவே இல்லே. இன்னும் என்னன்ன கர்மத்த எல்லாம் படிக்கனுமோ
Rate this:
Vijay - Chennai,இந்தியா
13 நவ, 2017 - 17:00 Report Abuse
Vijay இன்னும் கபாலி ஜால்றா நிறுத்தவில்லயா. அது பிளாப் படம்பா. நீங்களே அதை பற்றி ஒரு செய்தி போட்டீர்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in