ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜி.வி.பிரகாஷ் நடித்த திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அதன்பிறகு சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கினர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான அந்த படம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
அதனால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கயிருந்த ஆதிக் ரவிச்சந்திரன் அதை மறந்து விட்டு மீண்டும் தனது முதல்பட நாயகனான ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை தற்போது இயக்கி வருகிறார்.
இந்தநிலையில், அவர் ஏஏஏ படத்தின் இரண்டாம் பாகத்தை கிடப்பில் போட்டதை கருத்தில் கொண்டு அவரை சிலர் கலாய்த்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விவேகம் படத்தில் அஜீத் பேசிய ஒரு டயலாக்கை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.
அதாவது, "இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட தோத்துட்டேன்னு இந்த உலகமே உன் முன்னாடி நின்று அலறினாலும், நீயா ஒத்துக்கிற வரைக்கும், எவனாலும் எங்கேயும் ஒன்னை ஜெயிக்க முடியாது. நெவர் எவர் கிப் அப். முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.