ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் பிறந்த நாள் நிகழ்வுகள் இந்த வருடம், ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் நடந்துள்ளது. இதற்காக சில பாலிவுட் பிரபலங்களும் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்கள். ஸ்ரீதேவி தன்னுடைய திரையுலக நண்பர்களுக்காக விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவரது மனைவி சாய்ராவுடன் கலந்து கொண்டுள்ளார். பொதுவாக ஏ.ஆர்.ரகுமான் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் எதற்கும் அவருடைய மனைவியை அதிகம் அழைத்துக் கொண்டு வர மாட்டார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் மனைவியுடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
நடிகை ஷபனா ஆஸ்மி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலம் இந்த நிகழ்வு பற்றி தெரிய வந்துள்ளது. அவர் எடுத்துள்ள செல்பியில் ஏ.ஆர்.ரகுமான், அவரது மனைவி சாய்ரா, ஷபனா ஆஸ்மி, ஸ்ரீதேவி, போனி கபூர் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஸ்ரீதேவியின் கணவன் போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்த 'மாம்' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.