ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்ஜிஆர்-ன் வாழ்க்கை, "எம்ஜிஆர்" என்ற பெயரில் சினிமாவாக உருவாகிறது. ரமணா கம்யூனிகேசன் சார்பில் பாலகிருஷ்ணன் தயாரித்து, இயக்குகிறார். காமராஜ் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இப்படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.
எம்ஜிஆர்., ரோலில் சதீஷ்குமார் என்பவர் நடிக்க, அண்ணாதுரையாக இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, தீனதயாளன், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
எம்ஜிஆரின் சினிமா பயணம் தொடங்கி, அவரது அரசியல் பிரவேசம், முதல்வரானது வரை உள்ளிட்ட பல விஷயங்களை இப்படத்தில் இணைக்க உள்ளனர்.
எம்ஜிஆரின் வாழ்க்கை படம் என்பதால் இதன் படப்பிடிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிளாப் அடித்து இன்று(நவ., 10) துவக்கி வைத்தார். சென்னை, தரமணியில் உள்ள திரைப்பட பயிற்சி கல்லூரியில் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமானது.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி, எம்ஜிஆரின் பிறந்தநாளில் படத்தின் டீசரையும், ஏப்ரலில் படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.