ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாட்டில், மதுரையை சொந்த ஊராகக் கொண்ட சர்மாவின் மகளான அடா சர்மா, சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதற்கு முன், ஹிந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்த அடாவுக்கு தமிழ் சினிமா அறிமுகம் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.
இப்போது 'சார்லி சாப்ளின் 2' படம் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளார் அடா. சக்தி சிதம்பரம் இயக்க உள்ள இந்தப் படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ரானி, அடா சர்மா நடிக்க உள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கோவாவில் ஆரம்பமானது.
2002ம் ஆண்டு வெளிவந்த 'சார்லி சாப்ளின்' படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்திருந்தார். 'பிக் பாஸ்' புகழ் காயத்ரி ரகுராம் இப்படத்தில்தான் நாயகியாக அறிமுகமானார். இப்படம் முதன் முதலில் இந்தியாவில் ஆறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது. ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
15 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது ஆரம்பித்துள்ளார்கள். அடா சர்மாவுக்கு இந்தப் படமாவது நல்ல அறிமுகத்தைக் கொடுக்கட்டும்.