ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா, அடுத்து இயக்கும் படம் டாவு. டூ முவீ பப்ஸ் சார்பில் பி.எஸ்.ரகுநாதன் தயாரிக்கிறார். கயல் சந்திரனுடன், மூனீஷ்காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி, மனோபாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார், தீபக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
தில்லுக்கு துட்டு போன்று இதுவும் முழுநீள காமெடி படம். காதல், சென்டிமெண்டும் இருக்கும். சந்திரன் அறிமுமான கயல் படமும், அடுத்து நடித்த ரூபாய் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது கிரகணம், திட்டம்போட்டு திருடுற கூட்டம் படங்களில் நடித்து வருகிறார். தற்போது டாவிலும் நடிக்க இருக்கிறார். ஒரே ஒரு வெற்றிக்காக ஏங்கும் சந்திரனுக்கு இந்தப் படங்கள் மூலம் வெற்றி கிடைக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.