ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2002-ம் ஆண்டு பிரபு, பிரபுதேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் சார்லி சாப்ளின். ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியான பல படங்கள் தோல்வியடைந்திருந்தாலும் சார்லி சாப்ளின் படம் வெளியானபோது ஓரளவு வரவேற்பைப் பெற்றது. அதே நேரம் சார்லி சாப்ளின் படத்தை வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றிப் படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மக்களால் ரசிக்கப்பட்டது.
தற்போது பிரபுதேவா தமிழ்ப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக, முன்பு அவரை வைத்து படம் இயக்கியவர்கள் பிரபுதேவாவை வைத்து படம் எடுக்க ஆர்வம் காட்டி அவரை அணுகி வருகிறார்கள். அவர்களில் ஷக்தி சிதம்பரத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் பிரபுதேவா.
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க சார்லி சாப்ளின் - 2 படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது அதன் 2-ம் பாகம் திட்டமிடப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கருப்பன் படத்தில் நடித்த தான்யா மற்றும் நிக்கி கல்ரானி கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9-ம் தேதி கோவாவில் துவங்கவுள்ளது. ஜெயசித்ராவின் மகனான அம்ரிஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.